முன்னுரை
“கண்
கண்ட கடவுளை கவிஞனாக்கி”,
அவன்
கண்ட இந்நாள் உலகை
கருவாக்கி ,
உயிரும்
மெய்யுமாய் இருப்பவன்
சிந்தையில் உயிர்மெய்
எழுத்துக்கள் உலாவவிட்டு ,
அண்டங்கள்
காப்பவன் கரங்களில் அமிர்த
தமிழை விளையாடவிட்டு,
கற்சிற்பங்களில்
ஒளிந்து திருக்கோயில் கொண்டவன்
வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம்
வடித்தால் ....???
என்ற
கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே
"கடவுளின்
ஹைக்கூ”
நூல் : கடவுளின் ஹைக்கூ
ஆசிரியர் : .M விக்னேஷ்
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை :Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.